மோர்கன் வானவேடிக்கை! போட்டியையும் தொடரையும் வென்ற இங்கிலாந்து!
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 20ஓவர் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது.முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற, டர்பனில் நடைபெற்ற 2 ஆவது 20 ஓவர் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இதையடுத்து மூன்றாவது போட்டி செண்ட்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. தென் ஆப்பிரிக்க வீர்ரகள் அனைவரும் அதிரடியாக விளையாட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அந்த அணியின் க்ளாசன் 66 ரன்களும் பவுமா 49 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணியும் பதிலடி கொடுக்கும் விதமாக அதிரடியில் இறங்க ஸ்கோர் சீரான வேகத்தில் சென்றது. அந்த அணியின் பட்லர்(57) மற்றும் பேர்ஸ்டோ (64) ஆகியோர் சீரான அடித்தளம் அமைத்துக் கொடுக்க கடைசியில் களமிறங்கிய மோர்கன் அதிரடியில் இறங்கி 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை 19.1 ஓவர்களில் எட்டியது. சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை மார்கன் தட்டிச்சென்றார்.
டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து வென்றது.