அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 18 வயதேயான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டிகள் நடந்தன. இதில், இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர். இருவரும் பதின் பருவ மகளிர் என்பதால் போட்டியின் வெற்றியாளர் சாம்பியன் பட்டம் மற்றும் அல்லாது வேறு சில சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார் என்பதால் போட்டி மிகவும் பரபரப்பாக தொடங்கியது.
போட்டியில் தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராடுகானு சவால் அளிப்பார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட லேலாவை 6க்கு 4, 6க்கு 3 என்கிற நேர் செட்டுகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது அவருக்கு முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் பதின் பருவத்தில் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பெற்ற வீராங்கணை என்ற பெறுமையை செரீனா வில்லியம்ஸுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.