பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடமும் மிகுந்த பாராட்டு கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
உரிய காலத்தில் பள்ளிகளை செயல்படலாம் என்று தெரிவித்தது, அதேபோல மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் அவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்தது, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் இவருக்கு தனி செல்வாக்கு திகழ்ந்து வருகிறது.
திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மிக நெருங்கிய நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஸ்டாலின் தன்னுடைய அமைச்சரவையில் இடம் அளித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்க வைத்திருக்கிறார்.
முதன் முறையாக ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற இருக்கின்ற நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் முதன்முறையாக அமைச்சர் பொறுப்பை ஏற்று இருக்கிறார். ஆகவே இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில், சென்னை மந்தைவெளியில் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் தங்களுடைய பிறந்த நாளில் மரக்கன்று நடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.