சுயதொழில் துவங்க விருப்பம் உள்ளவரா நீங்கள்? அரசின் பயிற்சி முகாமின் விவரம் இதோ!

Photo of author

By Sakthi

சுயதொழில் துவங்க விருப்பம் உள்ளவரா நீங்கள்? அரசின் பயிற்சி முகாமின் விவரம் இதோ!

Sakthi

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு தொடர்பான இணைய வழி கருத்தரங்கை நடத்துகிறது.

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நடைபெறும் இந்த முகாமில் சுயமாக தொழில் தொடங்க விருப்பம் கொண்ட 18 வயது முதல் 30 வயது வரையில் இருக்கும் எல்லோரும் பங்கேற்றுக் கொள்ளலாம்.

முதல் கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் இருக்கின்ற நன்மைகள் தொழில் வாய்ப்புகள் தொழிலை தேர்வு செய்து எப்படி தொழில் துவங்கவருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் மற்ற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் உள்ளிட்டவை பற்றி இந்த முகாமில் விவரிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள். 044-22252081, 2252082, 7339497681, 8668102600.