மரண பாதைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம்: மகிழ்ச்சி பெருக எளிய வழிகள்!

0
108

மரண பாதைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம்: மகிழ்ச்சி பெருக எளிய வழிகள்!

இப்போது உள்ள காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. சிறியவர்கள் படிப்பு தேர்வுகள் என்ற பயத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் படிப்பில் கவனம் குறைவது, தேர்வில் மதிப்பெண் குறைவது போன்ற பிரச்சனைகளை ஏற்பட்டு அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது.

மேலும் பணிபுரிபவர்களுக்கும் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் மிகுந்த மன அழுத்தம் அடைகின்றனர்.இதோ உங்களை மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டு வர இந்த 8 வழிகள் போதும்.

மூச்சுப் பயிற்சி:

மூச்சுப் பயிற்சியின் போது நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக்கொள்ளவும் கைகளை அடி வயிற்றில் படும்படி வைத்துக்கொண்டு ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விடவும் இவ்வாறு செய்வதால் கவனம் மூச்சு இழுத்து விடுவதில் செல்லும்போது உடல்கள் தளர்வடைந்து இதய துடிப்பு சீராகும். இதன் மூலம் மன அழுத்தம் குறையும்.

நடைப்பயிற்சி:

இது சாதாரண நடைப்பயிற்சி போன்று இல்லாமல் மனக்கவலைகளை மறந்து நமக்கும் பூமிக்கும் ஒரு தொடர்போடு இருக்க மேற்கொள்ளப்படும் ஒரு பயிற்சி. இதில் கால்களில் செருப்பு இல்லாமல் காலையோ அல்லது மாலை வேலைகளோ வீசும் காற்றுடன் பாதங்கள் தரையில் பட சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உங்களுடைய மன அழுத்தமானது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

சிரிப்பே மருந்து:

மன அழுத்தத்திற்கு புன்னகை சிறந்த மருந்து. உங்கள் உங்கள் மனதில் அமைதி இல்லை, ஏதேனும் குறித்து மன கவலையில் உள்ள போது சிறிது நேரம் உங்களை சிரிக்க வைக்கும் ஏதேனும் ஒரு வீடியோ அல்லது குழந்தைகளின் புகைப்படம் அல்லது குழந்தைகளின் மழலை பேச்சு அல்லது காமெடி பார்ப்பது இதுபோன்ற ஏதேனும் செய்து சிறிது நேரம் புன்னகையுங்கள். இதன் மூலம் மனு அழுத்தமானது குறைகிறது.

இசை:

இசை கேட்பது ஒரு மிகுந்த ரிலாக்சேஷனாக இருக்கும் அதுவும் மனதிற்கு பிடித்த இசையை அளவான ஒளியில் இசைக்க விட்டு நாமும் கூட பாடும் பொழுது மனதில் உள்ள கவலைகள் மறந்து இசையோடு மூழ்கி போவோம். இவ்வாறு செய்வதால் மனதில் இருக்கும் கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

உணவு:

உணவில் என்ன மன அழுத்தம் குறையும் என்று யோசிக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்த சாக்லேட் அல்லது இனிப்பு வகைகள் அல்லது பிடித்த உணவை ரசித்து சாப்பிடும் போது கவலைகள் குறையும். மேலும் நண்பர்களுடன் கூடி சாப்பிடும் போது நமது கவனம் நண்பர்களுடன் பேசுதல் மற்றும் பிடித்த உணவுகளை உட்கொள்ளும் போது மனம் மகிழ்ச்சி அடையும்.

கிரீன் டீ:

கிரீன் டீ மூளையை அமைதிப்படுத்தும் வல்லமை கொண்டது. ரிலாக்ஸாக உணர வைக்கும். இயற்கையான சூழலை ரசித்துக்கொண்டே மிதமான சூட்டில் டீ குடிக்கும் பொழுது மனதை அமைதியாக்கும்.

நேர்மறை சிந்தனை:

நேர்மறை சிந்தனை இது ஒரு சிறந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவர நமக்கு நாமே செய்யும் மருத்துவம். நமக்கு ஏதேனும் கவலைகளோ அல்லது மனவருத்தங்களோ இருக்கும்பொழுது நாமே நம்மை தேற்றி கொள்ளுமாறு கவலை வேண்டாம்,” சீக்கிரம் எல்லாம் சரியாகும்”, “எல்லாம் நன்மையாகவே நடக்கும்”, இது போன்ற தன்னம்பிக்கை ஊட்டும் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதின் மூலமும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

இயற்கை ரசித்தல்:

நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்களா இல்லை வேலை செய்து கொண்டிருக்கிறீர்களா அல்லது வேறு ஏதேனும் மன அழுத்தமாக உணருகிறீர்களா? நீங்கள் செய்து கொண்டிருப்பதை உடனே நிறுத்துங்கள், அமைதியாக எழுந்து வீட்டிலோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ வெளியே எழுந்து வாருங்கள். சிறிது நேரம் சுற்றி உள்ளவைகளை பாருங்கள். தூரமாக உள்ள மரமோ அல்லது வீடோ அல்லது ஏதேனும் பறவைகளோ அதை பாருங்கள் அதனை ரசியுங்கள். காற்றோட்டமாக சிறிது நேரம் நடந்து செல்லுங்கள்.