சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை (வரைவு 2020) தமிழில் – மக்கள் மொழிபெயர்ப்பு

Photo of author

By Parthipan K

 

கொரோனா ஊரடங்கினால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இழப்புகள், மேலும் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகளில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் பேரிடர் சூழலில் பல இடர்பாடுகளை கொண்டுள்ள மக்கள் மீது அரசு பல சட்டங்களை அவசரகதியில் நிறைவேற்ற தீவிரமாக உள்ளது.

இதனைப் பற்றி யாவரும் தளத்தில்,
சூழல் அச்சம் மிக்கதாக சட்டம் ஒன்றினை இயற்றப் போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டத்தினை சூழலியல் ஆய்வாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் எதிர்க்கும் திட்டமாக இந்த ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’ இருக்கிறது. இதனைச் சிலர் தேவையற்ற அச்சம் என்றும், இதனால் பெரும் ஆபத்து ஏதும் நிகழாது என்றும் கூறிவருகின்றனர்.

130 கோடி மக்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் 19,500 வட்டார மொழிகள் பேசப்படுவதாக 2018 ல் வந்த கணக்கெடுப்பு சொல்கிறது. இந்தச் சட்டத்தினை நிறைவேற்றுவது பற்றி, இந்திய அரசியல் சட்டத்தின்படி எட்டாவது அட்டவணையில் உள்ளதுபடி, குறைந்தது 22 அலுவல் மொழியிலாவது மொழிபெயர்க்காமல் எப்படி மக்களின் கருத்துகளை உள்வாங்க முடியும் என்கிற கேள்விக்கு நீதிமன்றம் வாயிலாக கிடைக்கும் பதிலுக்கு கால அவகாசம் மிகச் சிறியதுதான்.

http://www.yaavarum.com/wp-content/uploads/2020/08/EIA-2020-draft-tamil-public-translation.pdf

ஆகவே இதனை, அரசாங்கம் செயல்படுத்தவில்லை என்றாலும், மக்களின் கருத்து கேட்புக்கு செவிசாய்க்க பொதுமக்களாகிய நாமே தான் அதனையும் மேற்கொள்ள வேண்டும் என, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு பற்றிய கோப்பினை தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். இதனை முகநூல் நண்பர்கள் வாயிலாக தாமாக முன்வந்து இதற்கான மொழிபெயர்ப்புப் பணிகளை செய்து முடித்தனர்.

இந்தச் சட்டத்தினை பற்றி மக்களின் கருத்து கேட்புக்கு சென்றடைய, தாய்மொழியில் தான் இருக்க வேண்டும் ஆதலால், அரசு இதனை செயல்படுத்த தவறிய நிலையில் அவசரகதியில் சட்டமியற்றும் இந்த குறுகிய காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி செவிசாய்க்க செய்வது தலையாய கடமையாகும்.

கீழே உள்ள லிங்க் தமிழில் உள்ள சுற்றுச்சூழல் தாக்க வரைவு கோப்பு

http://www.yaavarum.com/wp-content/uploads/2020/08/EIA-2020-draft-tamil-public-translation.pdf

http://www.yaavarum.com/wp-content/uploads/2020/08/EIA-2020-draft-tamil-public-translation.pdf

EIA-2020-draft-tamil-public-translation.pdf