இனிவரும் காலங்களில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மற்றும் ஷு , சாக்ஸ் போன்றவை இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டிலும் வைரஸ் பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் ,பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாமல் இருந்தனர் .இதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடந்துவருகின்றன. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் சற்று குறைந்த வண்ணம் இருக்கும் நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தற்போது செயல்பட்டு வருகின்றது. ஆனாலும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும்கூட மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்கள் ,சத்துணவு போன்றவை கொடுக்கப்பட்டு வருகின்றன.
அதோடு ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் சில நாட்களில் பள்ளிகள் ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்தநிலையில், சிவகங்கை மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நேரத்தில் அங்கே நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக சீருடைகள் வழங்குவதைப் போல இனிவரும் காலங்களில் ஷூ,சாக்ஸ் போன்றவை வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் இது மாணவர்களுக்கு இடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே தமிழக அரசின் சார்பாக சைக்கிள் மடிக்கணினி நோட்டுப் புத்தகம் சீருடைகள் என்று பலவகையான இலவசங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அமைச்சர் செங்கோட்டையன் ஷூ மற்றும் சாக்ஸ் போன்றவையும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பது அனைவராலும் வரவேற்கப்படுகிறது.
இதன் மூலம் ஏழை எளிய மாணவர்களும் தனியார் பள்ளிகளைப் போன்று மிடுக்காக உடை அணிந்து பள்ளிக்கு வந்து தன்னம்பிக்கையுடன் கல்வி பயில முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதேபோல பள்ளி மாணவ மாணவிகளும் இதனை கண்டு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்கள். இதன் மூலம் மாணவர்களுக்கு பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இன்னும் அதிகமாகும் என்றும் தெரிகிறது. அதோடு தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் ஏழை, எளிய மாணவ மாணவிகள் அனைவரும் தமிழக அரசிற்கு தங்களுடைய நன்றியினையும் தெரிவித்து வருகிறார்கள்.
அதேபோல தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளிக்கல்வி திட்டத்தில் சிறந்த ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் ,இலவசமாக மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்தையும் வழங்குவதாகவும் இதனை கருத்தில் கொண்டு தாம் அனைவரும் நன்றாகப் படித்து எதிர் வரும் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தற்சமயம் ஆட்சி செய்வதில் திகழ்ந்து வரும் தமிழகத்தை போல கல்வியில் தேர்ச்சி பெறும் விதத்திலும் எல்லா மாநிலங்களுக்கும் முன்னுதாரணமான மாநிலமாக மாற்றுவோம் என்று தமிழக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிபூண்டு இருக்கிறார்கள்.