தமிழக ரயில்களில் பயணிக்க இது அவசியம் – தென்னக ரயில்வே அறிவிப்பு

Photo of author

By Parthipan K

நாளை (02.06.2020) முதல் வெளிமாநிலங்களிலிருந்து சிறப்பு ரயில்களும் அதேபோல தமிழகத்திற்குள் கோயம்புத்தூர் – மயிலாடுதுறை, விழுப்புரம் – மதுரை, திருச்சி – நாகர்கோவில், கோயம்புத்தூர் – காட்பாடி ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது

இந்த ரயில்களில் பயணிக்க பலபயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகமிடையே ஒரு மண்டலத்திலிருந்து இன்னொரு மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் அவசியம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு உத்தரவின்படி ரயில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகள் இ-பாஸ் (E-Pass) பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ வேறு மாநிலத்திற்கோ ரயில் மூலம் செல்ல விரும்புவோர் கண்டிப்பாக தமிழக அரசிடம் இணையம் மூலம் தங்களது விவரங்களை பதிவுசெய்து இ-பாஸ் பெற்றிருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்த திடீர் அறிவிப்பால் பயணிகள் செய்வதறியாது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.