EPFO PENSION: இபிஎஃப் மெம்பர்ஸ்க்கு அடித்த லக்.. இனி கூடுதலாக ரூ.50,000 பெறலாம்!!

0
321
EPFO PENSION: Lucky hit for EPF members.. Now get extra Rs.50,000!!
EPFO PENSION: Lucky hit for EPF members.. Now get extra Rs.50,000!!

EPFO PENSION: இபிஎஃப் மெம்பர்ஸ்க்கு அடித்த லக்.. இனி கூடுதலாக ரூ.50,000 பெறலாம்!!

அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களின் ஓய்விற்கு பிறகு ஓய்வூதியம் பெற பணியாளர் வருங்கால வைப்பு நிதி(EPFO)யின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு வட்டி வழங்கி வருகிறது.தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க EPFO முக்கிய பங்காற்றுகிறது.

EPFO உறுப்பினர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்பட்டு PF கணக்கில் EPF மற்றும் EPS கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.இந்த திட்டத்தில் ஓய்வூதியம் பெற 10 ஆண்டுகள் பங்களிப்பு செய்திருக்க வேண்டும்.இத்திட்டத்தின் அதிகபட்ச ஓய்வூதிய சேவை 35 ஆண்டுகளாகும்.இது அனைத்து EPFO ஊழியர்களுக்கும் தெரிந்த ஒன்று தான்.

ஆனால் EPFO தொடர்ப்பன சில விதிகள் பற்றி உறுப்பினர்கள் தெரிந்து கொள்வதில்லை.அதாவது PF கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது அதே PF கணக்கை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மெயின்டைன் செய்து வருகிறார்கள் என்றால் அவர்களால் லாயல்டி கம் லைஃப் பெனிஃபிட் விதிப்படி ரூ.50,000 வரை நேரடி கூடுதல் பலன் பெறமுடியும்.

அதேபோல் மாதந்தோறும் ரூ.15,000 ரூபாயை உங்கள் EPF கணக்கில் செலுத்தி வருகிறீர்கள் என்றால் ஓய்வு காலத்தில் மாதா மாதம் ரூ.7,500 ஓய்வூதியமாக பெற முடியும்.EPFO-இல் அதிகபட்ச ஓய்வூதிய தொகை ரூ.7,500 மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை ரூ.1000 ஆகும்.