ஒற்றை தலைமையில் ஈபிஎஸ் ஆலோசனை கூட்டம்!!

Photo of author

By Vinoth

வருகிற 2026-ஆம் ஆண்டில்  சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.EPS advisory meeting under single leadership!!

இந்த கூட்டத்தில்  அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் பேசக்கூடிய கருத்துக்கள், எடுக்கக்கூடிய முடிவுகளும் அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிகிறது. அதிமுகவில் ஈபிஎஸ் தலைமையில் ஒற்றை தலைமை உருவான பின்னர் உறுப்பினர் சேர்க்கை மிக தீவிரமாக நடைபெற்றது.

2 கோடியே 20 லட்சம் பேருக்கு மேல் உறுப்பினர்களாக உள்ள நிலையில், அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை கொடுக்கும் பணிகள் மாவட்ட வாரியாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அது மட்டும் இல்லாமல் தற்போது கூட்டணி விவகாரம் பற்றியும் பேசயுள்ளார். மேலும் தவெக தலைவர் மற்றும் ஈபிஎஸ் அவர்கள் அலைபேசியில் முக்கிய முடிவுகள் எடுத்ததாக தகவல் பரவி வருகிறது.