ரஜினியின் ‘அற்புதம்’ பேட்டிக்கு முதல்வர் மற்றும் சீமான் பதிலடி

Photo of author

By CineDesk

ரஜினியின் ‘அற்புதம்’ பேட்டிக்கு முதல்வர் மற்றும் சீமான் பதிலடி

நடிகர் ரஜினிகாந்த் என்ன சொன்னாலும் ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்தி வருவது மட்டுமின்றி அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருவதால் ரஜினி ஒரு பேட்டி அளித்தால் அது ஒரு வாரத்திற்கு டிரெண்டிங்கில் உள்ளது

அதேபோல் இன்று சென்னை விமான நிலையத்தில் 2021ஆம் ஆண்டு நிகழும் அற்புதம், அதிசயம் குறித்து ரஜினிகாந்த் அளித்த பேட்டிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் கூறியபோது, ‘எந்த அடிப்படையில் 2021ஆம் ஆண்டில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை என்றும், ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூற முடியும் என்றும், வரும் 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் என்றும், 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார்’ என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து சீமான் கூறியபோது, ‘ஆம் அதிசயம் நிகழும்: தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும் என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் என்னும் வெற்றுப்பிம்பம் இனமான தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021ல் நடக்கும், நடந்தே தீரும்’ என்று கூறினார்.