மத்திய அரசை குற்றம் சாட்டிய முதல்வர் – ஆச்சரியத்தில் மக்கள்

Photo of author

By Parthipan K

முதலமைச்சராக பதவியேறத்திலிருந்து , தற்போது வரை மத்திய அரசிடம் இணக்கம் காட்டி வரும் முதல்வர் பழனிசாமி இது வரை மத்திய அரசை எதற்க்கும் விமர்சித்ததில்லை. அவர் கட்சியைச் சேர்ந்த வேறு யாராவது விமர்சித்தாலும் அவர்களை கட்டுப்படுத்தி வந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று முதன் முறையாக மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார் முதவர் பழனிசாமி.

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், குடிமராமத்து பணிகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர் “அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகக் குறிப்பிட்டார். தமிழகம் தேசிய அளவில் கொரோனா தடுப்பு பணியில் முதன்மை மாநிலமாக இருப்பதாகவும் கூறினார்.

கொரோனா தடுப்பு பணிக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், ஊரடங்கால் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளதாகவும், இதனை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்”.

முதலமைச்சரின் வெளிப்படையாக மத்திய அரசை குற்றம்சாட்டிப் பேசியது அவரது கட்சியினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.