மழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை விரைவாக பார்வையிட்டு தகுந்த நிவாரணம் வழங்கவேண்டும் EPS வலியுறுத்தல்!!

Photo of author

By Vinoth

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது.

தற்போது வடகிழக்கு பருவ மழை குறிப்பிட கடலோர மாவட்டங்களில் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை பொய்த்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 5 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து பின்னர் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும். என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புயலுக்கு பெங்கல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையின் தரங்கம்பாடிக்கு தமிழக பேரிடர் மீட்பு படை வந்து சேர்ந்துள்ளது. பைபர் படகு, கயிறு, மண்வெட்டி உள்ளிட்ட மீட்பு கருவிகளுடன் 30 பேர் கொண்ட மீட்பு குழுவினர் வருகை தந்துள்ளனர். தரங்கம்பாடியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளத்தில் சிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகளை மீட்பதற்கான பணிக்காக இந்த மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

மேலும் தற்போது மிக கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் கிட்டத்தட்ட 1500 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு தகுந்த நிவாரணத்தை கொடுக்குமார் திமுக அரசுக்கு வலியுறுத்து உள்ளார் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.