பொதுச் செயலாளராக முதன்முறையாக தலைமை அலுவலகத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி! தொண்டர்கள் உற்சாகம்!

0
174

அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையிலிருந்து வெளியாகியிருக்கின்ற செய்தி குறிப்பில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 10 மணியளவில் தலைமை கழகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகைக்கு வருகை தந்து தலைமை கழக வளாகத்தில் இருக்கின்ற கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா, உள்ளிட்டோரின் திருவருவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ,கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், உள்ளிட்டோர் பெருந்திரளாக பங்கேற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும், கூறப்பட்டுள்ளது.

Previous articleபிரபல நகைச்சுவை நடிகருக்கு சப்தமே இல்லாமல் நடைபெற்ற டும் டும் டும்!
Next articleவெளியானது நீட் தேர்வு முடிவுகள்! அதிர்ச்சியில் திருவள்ளூர் மாணவி எடுத்த முடிவு!