வாய்ப்பை தவறவிட்ட EPS.. விஜய்க்கு அடித்த ஜாக்பாட்!! கூட்டணியில் கலக்கப்போகும் தவேக !!

0
15
eps-missed-the-opportunity-vijay-hit-the-jackpot-thaveka-will-join-the-alliance
eps-missed-the-opportunity-vijay-hit-the-jackpot-thaveka-will-join-the-alliance

ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாமக கூட்டணி நல்ல வாக்கு சதவீதத்தை கொடுத்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்தது. பெரும்பான்மையான இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் மக்கள் மனதில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை காட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதே தான் விரும்புகின்றனர். இதைத்தான் ராமதாஸ் அவர்களும் சமீபத்தில் தனது மகன் மீதான குற்றச்சாட்டுகள் அடுக்கிய பெட்டியில் கூட கூறியிருந்தார்.

அப்படி பாஜக பாமக அதிமுக என்ற முக்கோண கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி தவறி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் தற்போது நடைபெற போகும் ராஜசபா சீட் ஒன்றை அன்புமணிக்கு ஒதுக்கி இருந்தால் கட்டாயம் அதிமுகவுடன் கூட்டணி உறுதியா யிருக்கும். ஆனால் எடப்பாடி அவ்வாறு செய்யவில்லை. இந்த வாய்ப்பை விஜய் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என எண்ணுகிறாராம். இது ரீதியாக குறிப்பிட்ட சில நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம். நாம் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்ததிலிருந்து பாமகவை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு செயல்முறையும் செய்து வருகிறோம்.

அதனை முன்னிறுத்தி எப்படியாவது பாமகவை நம் கட்சியுடன் இணைக்க பேச்சுவார்த்தை நடத்துங்கள். அத்தோடு அதிருப்தியில் இருக்கும் தேமுதிக தங்கள் பக்கம் இழுக்க முயலுங்கள் என்று கூறியுள்ளாராம். இவ்வாறு பாமக தேமுதிக என இரு கட்சிகளின் ஆதரவோடு நாம் தமிழர் சீமானும் சற்று ஆதரவை தெரிவிக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேல் வாக்கு பெற்று விடலாம் என்று விஜய் கூறியுள்ளார். இதனால் எடப்பாடிக்கு பாமக தேமுதிக என்ற எந்த கூட்டணியும் இல்லாமல் பாஜகவுடன் தனித்தனி என்று இம்முறையும் தேர்தலில் பின்வாங்க போகிறார் என கூறுகின்றனர்.

Previous articleதுணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி? வெளியான ஷாக் நியூஸ்!!
Next articleகாலையிலேயே மாணவர்களை குஷி படுத்திய அரசு; 4 நாட்கள் தொடர் விடுமுறை!!