என்னைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது! கோபத்தின் உச்சத்திற்கு சென்ற முதல்வர் அதிகாரிகள் அதிர்ச்சி!

Photo of author

By Sakthi

விவசாயத்தைப் பற்றி கொஞ்சம் கூட தெரியாத ஸ்டாலினுக்கு, எப்படி போலியான விவசாயி, உண்மையான விவசாயி, என்று எவ்வாறு தெரிய வந்தது எனக்கு விவசாயம் தெரியும் எனக்கு என்ன தெரியும் என்று கேட்டு இருக்கின்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில். புற்றுநோய் சிகிச்சை கருவியை இயக்கி, தொடங்கி வைத்தார் முதல்வர்.

அப்போது பேசிய முதல்வர் விவசாயத்தைப் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு எப்படி உண்மையான விவசாயி, போலியான விவசாயி, என்று தெரிய வந்தது எனக்கு விவசாயம் தெரியும் ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? விவசாயி என்ற சான்றிதழை அவர் எனக்குத் தர வேண்டியது இல்லை முதல்வராக இருக்கும் நேரத்தில் கூட, நான் விவசாயத்தைத் தொடர்ந்து கவனித்து வருகின்றேன்.

சிறுவயது முதலே நான் எவ்வளவு கடினமான உழைப்பாளி என்பது, என்னுடைய ஊர் மக்களைக் கேட்டால் உங்களுக்கு தெரிய வரும்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் வருவதற்கு காரணம் ஸ்டாலின்தான். ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார், என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.

அனைத்தையும் செய்துவிட்டு இப்போது பழியை மட்டும் எங்கள் மீது போடுகிறார்கள் என்று முதல்வர் ஆவேசமாக கூறினார்.

நீர் மேலாண்மை திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கின்றது, நீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எங்கள் அரசு எடுத்து வருகிறது சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்தார்.