எதிர்கட்சி தலைவருக்கு எதிரான தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் நிலை வந்தால், அவர் ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிட இயலாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணி, மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், சம்பந்தமான ஆய்வு கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் தெரிவித்ததாவது, இந்த அரசு எவ்வளவு நெருக்கடியான காலத்திலும் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது சம்பந்தமான உண்மைகளை செய்திகள் மூலமாக ஊடகங்கள் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் முதல்வர்.
எதிர்க்கட்சித் தலைவர் ஒரு உண்மையான அரசியல் கட்சித் தலைவராக இருந்தால், இப்போது தமிழ்நாட்டை பாராட்ட வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஏன் கேரளாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கூட தமிழகம் கொரோனாவை எந்த அளவிற்கு கட்டுப்படுத்தி இருக்கின்றது என்பது தெரியவரும் என்றார்.
ஸ்டாலின் மருத்துவர்களும், செவிலியர்களும், மற்றும் அரசு ஊழியர்களையும், பாராட்ட வேண்டும். அரசு சட்டம்தான் போடுகின்றது ஆலோசனைகளை தான் கொடுக்கின்றது ஆனால், அதை நிறைவேற்றிக் கொண்டிருப்பது அதிகாரிகள் தான், என்பதை தயவுசெய்து எண்ணிப் பாருங்கள் என்றார் முதல்வர்.
சில மாதங்களுக்கு முன்னாள் கேரளாவுடன் ஒப்பீடு செய்து தமிழகத்தை பேசினார்கள் இப்போது கேரளாவில் கொரோனா அதிகரித்துக் கொண்டிருக்கின்றது இதற்கு அவர் என்ன சொல்லப் போகின்றார்.
புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது, அந்த கட்சியினுடைய பெயரை சொல்லி நான் அதை பிரபல படுத்த விரும்பவில்லை.
அந்தக் கட்சியின் உடைய தலைவர் தெரிவித்தார் ,கேரளாவை சென்று பாருங்கள் என இப்போது அவரை சென்று கேரளாவை பார்க்கச் சொல்லுங்கள்.
எல்லோரும் சென்று திருவனந்தபுரத்தில் பத்து நாட்கள் தங்கியிருந்து விட்டு வரச் சொல்லுங்கள் அப்போது தெரியவரும் நிலைமை என்ன என்று.
கேரள அரசின் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக, இதை நான் சொல்லவில்லை அரசு எடுத்த தீவிரமான நடவடிக்கைகளின் மூலமே தமிழகத்தில் தோற்று கட்டுக்குள் கொண்டுவர பட்டிருக்கின்றது.
அதிமுக செய்கிற திட்டங்கள் அனைத்தையும் நாட்டு மக்கள் நேரடியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போடப்பட்டு அது நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது என்பதை மட்டும் ஸ்டாலின் நினைத்துப் பார்க்கவேண்டும்.
ஸ்டாலின் கூட அடுத்த தேர்தலில் நிற்க முடியுமா என்ற நிலை இருந்து வருகின்றது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்றது. உச்ச நீதிமன்றத்தில் அவர் மீதான தேர்தல் வழக்கு ஆரம்பிக்கப்பட்டு விட்டது அது எவ்வாறு முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை முடிவு என்பது வேறு விதமாக இருந்துவிட்டால், அவர் ஆறு வருடத்திற்கு தேர்தலில் நிற்க இயலாது.
அவர் கண்டு கொண்டிருக்கும் கனவும் பொய்த்துப் போகும். நல்ல எண்ணம் கொண்டு இருந்தால், நல்ல தீர்ப்பு கிடைக்கும் தீய எண்ணம் கொண்டிருந்தால் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று முதல்வர் தெரிவித்தார்.