சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். சுமார் 800 ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பிய வண்ணம் இருப்பதால் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அவசர ஊர்தியிலேயே பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெறுவதற்கான நிலை உண்டாகி இருக்கிறது. இதுவரையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்து காத்திருந்த நோயாளிகள் 9 நபர்கள் அவசர ஊர்தியிலேயே பலியானார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுபோன்ற ஒரு சூழலில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் இ.பி.எஸ் தமிழக அரசுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கிற வலைதள பதிவில், அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் மற்றும் ரிசிவர் போன்ற உயிர்காக்கும் வசதிகள் இல்லாமல் பலர் நோய்களினால் பாதிக்கப்பட்டு அவஸ்தைக்கு ஆளாகி இருப்பதை பார்க்க முடிகிறது. நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் உண்டாகி உயிர் இழப்பதையும் அறிந்து துயரத்திற்கு ஆளானேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மக்களை பாதுகாக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருப்பதால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விலைமதிப்பு இல்லாமல் இருக்கும் உயிரை பாதுகாக்கும் விதமாக அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கொடுக்கவும், போதிய ஆக்சிஜன் கிடைப்பதற்கும் தடுப்பு மருந்துகள் கிடைப்பதற்கும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
பொதுமக்களின் விலைமதிப்பில்லா இன்னுயிரை பாதுகாத்திடும் வகையில், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும், போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், தடுப்பு மருந்துகள் கிடைக்கவும், போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.(3/3)
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 14, 2021