ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் மாயம்! போலீசார் வலை வீச்சு!

0
215
Erode District Young Girl Mayam! Police net!
Erode District Young Girl Mayam! Police net!

ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் மாயம்! போலீசார் வலை வீச்சு!

 திருச்சி மாவட்டம் தொட்டியம் கவுந்தாரசநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் மகள் மோனிகா (20). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை  காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் அவர்களின் குழந்தைகளுடன் பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

அதே பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் கணவன் மனைவி இருவரும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற மோனிகா வீடு திரும்பவில்லை அதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் சூர்யா இணைந்து பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு  தேடியும் மோனிகா கிடைக்காத காரணத்தால் மோனிகாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அவர்களும் பல்வேறு இடத்தில் தேடி  பார்த்தனர் அவர்களின் தேடுதலிலும் மோனிகா கிடைக்கவில்லை. மேலும் இது குறித்து பெருந்துறை போலீசாருக்குபுகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில்   வழக்கு பதிவு செய்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மதுசூத வேகம் விசாரணை நடத்தி வருகிறார் மேலும் காணாமல் போன மோனிகாவை வலை வீசி தேடி வருகின்றனர்.

Previous articleகருவறையில் இருந்த மகன் இன்று ஆளான போது தெருவீதிக்கு தனது வயதான பெற்றோரை விரட்டியடித்த  அரசு பணியாளர்!..
Next articleஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக இளைஞர் பலி! சோகத்தில் ஆழ்ந்த பகுதி மக்கள்!