ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முதல் சுற்று முடிவுகள் வெளியீடு!! 

Photo of author

By Parthipan K

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முதல் சுற்று முடிவுகள் வெளியீடு!! 

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலையில் தொடங்கியது. 

இதனையடுத்து அனைத்து கட்சியினரும் மிக ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்றோது மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை திமுகவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருக்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் முதல் சுற்று முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல் சுற்றின் முடிவில் காங்கிரஸ்  8,429 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அடுத்ததாக அதிமுக 2,873 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி 522 வேட்பாளர்களை பெற்றுள்து. தேமுதிக 112 வாக்குகள் பெற்றுள்ளது. 3-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுகொண்டிருக்கிறது.