ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! பாஜக தனித்துப் போட்டியிட முடிவு!

0
186

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! பாஜக தனித்துப் போட்டியிட முடிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவையொட்டி அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதையடுத்து இந்த இடைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆதரவு கேட்ட பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரிடமும் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த பாஜக அறிவுறுத்தியது. இணைந்து போட்டியிட பன்னீர்செல்வம் தரப்பு ஏற்றுக் கொண்ட போதும் பழனிச்சாமி தரப்பு இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து போட்டியிட முடியாது என பழனிச்சாமி தரப்பு உறுதியாக கூறிவிட்டது. இரண்டு அணிகளுமே இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.   அதிமுகவில் நீடித்து வரும் குழப்பத்தால் இதில் இரண்டு தரப்பினரில் ஒரு தரப்பில் மட்டும் ஆதரிப்பதற்கு பாஜக தயக்கம் காட்டி வருகிறது. இதனால் நடக்கும் இடைத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அதன் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயார் என ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம்  கூறியிருந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே 14 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை பாஜக அமைந்துள்ளது. இந்த தேர்தலின் மூலம் தமிழ்நாட்டில் தங்கள் பலத்தை அறிய முடியும் என்று பாஜக கருதுவதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Previous articleதொடர்ந்து மூன்று நாட்களுக்கு பார்சல் சேவைகள் ரத்து! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Next articleஇவர்களுக்கு தொடர்ந்து மின் திட்டங்கள் கிடைக்குமா இல்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்!