ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடங்கியது!!

0
374
#image_title

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடங்கியது!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலையில் தொடங்கியது. பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் 1,11,025 ஆண்களும், 1,16,497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 ,27,547 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

77 வேட்பாளர்கள் இருப்பதால் மாதிரி வாக்குப்பதிவு அதிகாலை 4.30 மணிக்கே தொடங்கியது. ஒரு வாக்குச்சாவடி மையத்தில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடுகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில்  வாக்குப்பதிவு செய்யப்படுகின்றது. 

 

Previous articleதினமும் ஒரு கப் சாப்பிடுங்க!  உடம்பு வலி கை கால் வலி பறந்து போகும்! 
Next articleமகளிர் டி20 உலக கோப்பை போட்டி- 6வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!