குறிப்பாக இந்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு போட்ட அதிரடி  உத்தரவு!

Photo of author

By Rupa

குறிப்பாக இந்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு போட்ட அதிரடி  உத்தரவு!

தற்போதைய தொழில் நுட்பம் முழுவதும் ஆண்ட்ராய்டு போன் மற்றும் கணினி மயமாக்கப்பட்டது. சிறு பெட்டி கடைகள் முதல் பெரும் கடைகள் வரை அனைத்து இடங்களிலும் கணினி பயன்பாடு காணப்படுகிறது. மக்களும் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி தொடர்ந்து செல்கின்றன. முன்பெல்லாம் கணக்கு வழக்குகளை புத்தகத்தில் எழுதி வைத்தனர்.அந்த காலம் சென்று தற்பொழுது கணினியில் பதிவிட்டு கொள்கின்றனர்.இந்த பதிவை நாம் எத்தனை ஆண்டுகள் கழித்தும் எடுத்து பார்த்துக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் இருந்தே கணினி பயிற்சிகள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து கற்பிக்கப்பட்டு வருகிறது.

ஏனென்றால் அவர்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அதன் உபயோகம் தன்மை அதிகரித்து காணப்படுவதால் அவர்களுக்கு பள்ளிகளிலேயே கற்பிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களும் மற்ற பாடங்களை விட கணினி பயிலுவதற்கு அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி பல தனியார் துறைகள் கட்டணம் பெற்றுக்கொண்டு கணினி கல்வி என தொடங்கி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகிறது. தனியார் துறைகளை போலவே அரசு துறைகளிலும் இந்த கணினியின் பயன்பாடானது அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது ,வேலைவாய்ப்பு பதிவு போன்றவற்றை இணையதளம் வாயிலாக செயல்படுத்தி கொள்கின்றனர்.

தமிழக அரசில் தங்கள் எத்தனை சட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது என்பதை மக்கள் காண எளிமையான முறையில் ஓர் ஆப்பை வெளியிடுவதாக கூறினர். அதனைப் பயன்படுத்தி நாம் அனைத்தையும் உடனுக்குடனே தெரிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்தனர். அதுவும் இந்த வகைகளில் ஒன்றுதான். அதுமட்டுமின்றி தற்போது முடிந்த இரண்டாம் கட்ட கொரோனா காலகட்டத்தில் அனைத்து துறைகளும் தங்களது வீட்டிலிருந்தபடியே பணிகளில் செய்யும்படி கூறினார். இந்த கணினி இருந்ததால் மட்டுமே அந்த வேலைகள் அனைத்தும் சாத்தியமானது.

அதனால் தமிழக அரசு ஒரு புதிய உத்தரவு ஒன்றை முக்கியத் துறைகளில் பணியாற்றுவோருக்கு போட்டுள்ளது. அது என்னவென்றால், ரகசியம் காக்க வேண்டிய பொது துறை ,உள்துறை ஆளுநரின் செயலகம் போன்ற துறைகளில் பணிபுரியக்கூடிய சிறப்பு உதவியாளர்கள் ,சிறப்பு பிரிவு உதவியாளர்கள், மற்றும் உயர் பதவிகளுக்கு செல்பவர் ஆகியோருக்கு கட்டாயம் தொழில்நுட்ப ரீதியான கணினி பயிற்சி திறன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அந்த வகையில் தட்டச்சு, தமிழ் ,ஆங்கிலம் ,இளநிலை முதுநிலை ,போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை எடுத்து வைத்துள்ளது. மேலும் கணினியை பயன்படுத்துவதற்கான போதிய திறன் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.