யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலியை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றும் என பாலைவனக் கீரி ஆரூடம் தெரிவித்துள்ளது.
யூரோ கோப்பை 2020 கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் லண்டனில் உள்ள விம்பிலே திடலில் நாளை நடைபெறவுள்ளது. இதில், 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இத்தாலியும், 55 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இங்கிலாந்தும் மோதுகின்றன. இதனால், கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், இறுதிப் போட்டியில் இத்தாலியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெறும் என மீர்கட் (Meerkat) எனப்படும் பாலைவனக்கீரி ஆருடம் தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள உயிரியல் பூங்காவில் இருநாட்டு கொடிகள் நடப்பட்டு பாலைவனக் கீரிகளை விட்டதும், இங்கிலாந்து கொடியை மட்டும் தோண்டியதால், அந்த அணி வெற்றி பெறும் என தெரிவிக்கின்றனர்.
A group of so-called ‘mystic meerkats’ at London Zoo have picked England to beat Italy in the #EURO2020 final ⚽ https://t.co/WnIMgpQ6Ua pic.twitter.com/nTGRzfkodw
— Reuters (@Reuters) July 9, 2021
உலகக் கோப்பை கால்பந்து போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள்? என்பதை ஆக்டோபஸ், பன்றி போன்ற உயிரினங்கள் மூலம் முன்கூட்டியே கணிக்கும் முறை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.