80 வயதிலும் உங்கள் முடி சும்மா கரு கருன்னு இருக்க.. இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடியை கருமையாக மாற்ற வீட்டிலேயே ஹேர் பேக் தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவையானவை

*ஹென்னா பொடி
*வெந்தயப் பொடி
*காபி தூள்
*துளசி
*புதினா
*தயிர்
*கறிவேப்பிலை

செய்முறை விளக்கம்

1.முதலில் கால் கைப்பிடி துளசி இலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

2.அதேபோல் 10 முதல் 15 புதினா இலைகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

3.பிறகு மூன்று தேக்கரண்டி மருதாணி பொடி,ஒரு தேக்கரண்டி வெந்தயப் பொடி,ஒரு தேக்கரண்டி காபி பொடி மற்றும் இரண்டு தேக்கரண்டி தயிர் மற்றும் இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடி எடுத்துக் கொள்ளுங்கள்.

4.இப்பொழுது ஒரு இரும்பு வாணலியை எடுத்து அதில் மருதாணி பொடி,காபி பொடி,வெந்தயப் பொடி,கறிவேப்பிலை பொடி மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

5.பிறகு அரைத்து வைத்துள்ள துளசி சாறு ,மற்றும் புதினா சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

6.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை சிறிது தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் மருதாணி கலவை உள்ள பாத்திரத்தை அடுப்பில் இருக்கின்ற பாத்திரத்திற்கு வைத்து டபுள் பாய்லிங் மெத்தடில் சூடாக்கவும்.

7.பத்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் சூடாக்கி பின்னர் ஒரு இரவு முழுவதும் ஆறவிடவும்.

8.மறுநாள் இந்த ஹேர் பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

9.பிறகு மென்மையான ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

10.இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு இருமுறை தலை முடிகளுக்கு செய்து வந்தால் வெள்ளை முடி அனைத்தும் கருமையாகும்.