DMK : கலைஞர் உரிமைத் தொகையானது திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து கொடுக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பெண்களின் வாக்கு வங்கியை கவர மீண்டும் இந்த திட்டத்தினை விரிவாக்கம் செய்வதாக கூறியுள்ளனர். அதன்படி வரும் ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது ரீதியாக முகாம் அமைத்து மேற்கொண்டு புதிய நபர்கள் சேர்க்கப்படுவதாக கூறியுள்ளனர். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு சந்தேகங்கள் தற்போது வரை இருந்து வருகிறது.
அதன்படி முதலாவதாக இருப்பது, ஒரு வீட்டில் மூன்று பெண்மணிகள் இருக்கும் பட்சத்தில் அதில் ஒருவர் பென்ஷன் வாங்கி வந்தால் அவர்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை கிடைக்காதா என கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது குடும்ப தலைவியாக பென்ஷன் வாங்கும் நபர் இருக்கும் பட்சத்தில் கட்டாயம் உரிமை தொகை கிடைக்காது. மாறாக வேறு பெண்கள் இருந்தால் உரிமை தொகை கிடைக்கும். இதற்காக பென்ஷன் வாங்கும் நபரை குடும்ப அட்டையில் இருந்து நீக்க வேண்டாம் என்றும் கேட்டுள்ளனர்.
இனிவரும் நாட்களில் மாற்று உதவித்தொகை வாங்குபவர்களுக்கும் இந்த குடும்ப தலைவிக்கான உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏனென்றால் பல தளர்களை ஏற்படுத்தி தான் இத்திட்டம் மீண்டும் புது வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் நெருங்குவதால் மீண்டும் இந்த திட்டத்தில் தொடர்புகளை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளனர்.