லட்சுமி தேவியின் மறு உருவமாக திகழும் செல்வத்தை அடைய அனைவரும் ஆசைக்கொள்கின்றனர்.ஆனால் எல்லோர் வீட்டிலும் பணம் செல்வம் தங்குவதில்லை.இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் பெரும் பிரச்சனை பணப் பிரச்சனை தான்.விலைவாசி உயர்வு,மருத்துவச் செலவு போன்றவற்றல் சம்பாதிக்கும் பணம் கரைந்துவிடுகிறது.இதனால் அவரச தேவைக்கு பிறரிடம் கடன் வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.
தொடர்ந்து கடன் பிரச்சனை ஏற்பட்டால் நம் வாழ்க்கை நரகமாகிவிடும்.இப்படி பணப் பிரச்சனை நம்மை சூழ்ந்துகொள்ள பல காரணங்கள் இருக்கின்றது.நாம் லட்சங்களில் பணம் சம்பாதித்தாலும் வீட்டில் செய்யும் சில தவறுகள் மூலம் கைக்கு வந்த பணம் அப்படியே நழுவிச் சென்றுவிடுகிறது.வீட்டில் நாம் செய்யும் சில தவறான விஷயங்கள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
1)முதலில் பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் இன்று பலரது வீட்டு பூஜை அறையில் ஒட்டடை படிந்து காணப்படுகிறது.வீட்டு பூஜை அறை இப்படி இருந்தால் லட்சுமி தேவி வாசம் செய்ய மாட்டார்.இதனால் கடுமையான பணக் கஷ்டத்தை சந்திக்க நேரிடும்.எனவே வீட்டு பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள பழகுங்கள்.
2)சூரியன் மறையும் நேரம் அதாவது மாலை 6 மணிக்கு மேல் வீட்டை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு செய்தால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்துவிடும்.
3)உணவு உட்கொண்ட பாத்திரங்களை சுத்தம் செய்யாமல் வைத்தால் வீட்டில் மூதேவி குடிபுகுந்து விடுவார்.இதனால் பணக் கஷ்டம்,துன்பம் போன்றவை ஏற்படும்.
4)அழுக்கு துணியை சேர்த்து வைத்திருக்க கூடாது.அதேபோல் கிழிந்த துணி மற்றும் உடைந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.
5)வீட்டில் முள் செடி இருந்தால் அகற்றிவிட வேண்டும்.வீட்டில் குப்பைகளை சேர்த்து வைக்கக் கூடாது.அதேபோல் வீட்டில் ஒட்டடை படிந்திருந்தால் பணக் கஷ்டம் வரும்.வீட்டு பூஜை அறையில் காய்ந்த எலுமிச்சை,பூக்கள் இருந்தால் அகற்றிவிட வேண்டும்.இனி இந்த தவறுகளை திருத்திக் கொண்டால் பணக் கஷ்டம் ஏற்படுவது குறையும்.