இந்தியாகிட்ட தோற்றால் கூட பரவாயில்லை…. ஆனா… இதை மட்டும் பண்ணாதீங்கள் : அப்துல் ரசாக்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாள அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் நேபாள அணியை துவம்சம் செய்து பாகிஸ்தான் தன் முதல் வெற்றியை பதிவு செய்து ஆட்டத்தை துவக்கியுள்ளது.
இந்நிலையில், நாளை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதற்காக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இலங்கை சென்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான், இந்தியா அணிகள் மோத இருப்பதால் உலக ரசிகர்களிடயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் பேசுகையில், தற்போது பாகிஸ்தான் அணி சரியாக உள்ளது. தரமான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அவர்கள் தர வரிசையில் முன்னிலையில் இருக்கிறார்கள். ஒரு கேப்படனுக்கு எதெல்லாம் வேண்டுமோ அது பாபர் அசாமிற்கு தற்போது கிடைத்திருக்கிறது. இனிமேல் பாகிஸ்தான் இந்த அணியைக் கொண்டுதான் விளையாடப்போகிறது.
இந்த அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவினால் கூட பராவாயில்லை. ஆனால், பாகிஸ்தான் கேப்டன் பிளேயிங் லெவலை மட்டும் மாற்றக்கூடாது. பாகிஸ்தான் அணியில் டாப் 4 வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினாலும் நடுவரசையில் போதிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் கிடையாது.
நேபாள அணியுடன் விளையாடும்போது, பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறி போனார்கள். இதுதான் பாகிஸ்தான் அணியில் இருக்கும் மைனஸ். ஆனால், அப்துல் ரசாக் இந்த அணியை மாற்ற வேண்டாம் என்றார்.