பிரபல சேனல் ஆன “ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ‘தமிழா தமிழா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விவாதம் வைக்கப்படும். பலதரப்பட்ட மக்களும் கலந்து கொள்ளும் ஒரு பேமஸான நிகழ்ச்சி. நிகழ்ச்சி தொகுப்பாளரின் பேச்சும் நடுநிலை வாய்ந்ததாக இருக்கும். இந்த வாரம் ‘விவாகரத்தால் பாதிக்கப்படுவது ஆண்களா பெண்களா’ என்றத் தலைப்பில் நிகழ்ச்சி அரங்கேறியது.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள் ஒரு அணியாகவும், பெண்கள் ஒரு அணியாகவும் கலந்து கொண்டனர். ஆண்கள் அணியில் ஒரு பெண்ணும் விவாகரத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களே என்று அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து சொல்ல வந்திருந்தார்.
பெண்கள் அணியில் உட்கார்ந்து இருப்பவர்கள் பேசியது மனதை உருக்கியது. விவகாரத்தான ஆண்களிடம் மனைவி குறித்து யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் பெண்களிடமோ, உறவினர்கள் முதல் வெளியில் உள்ள மக்கள் மற்றும் வேலை பார்க்கும் இடங்களிலும் கணவன் குறித்து பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன என்றனர். கணவன் இல்லை என்று தெரிந்து அத்துமிறும் சமூகத்தினரைப் பற்றியும், அவர்கள் சமூகத்தில் படும் துயரம் குறித்தும் கூறியிருந்தார்கள்.
அதில் ஒரு பெண் தனக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து வேண்டி 8 வருடங்களாக போராடி வருவதாகவும், தனக்கு இரு மகன்கள் உண்டு எனவும் சொன்னார். பொருளாதார சூழ்நிலை காரணமாக தன் இரு மகன்களும் தகப்பனிடம் வளர்ந்து வருவதாகவும் கூறினார். தனது இளைய மகன் சட்டப்படிப்பு படித்துள்ளார். அவர் என்னை விட உயரமாக இருப்பார். அவர் ஒரு முறை என்னை பார்க்க வந்த போது அங்குள்ளவர்கள் என்னை தேடி ஒரு இளைஞன் வந்து செல்கிறார் என்று பேச தொடங்கினர் என தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அந்தப் பெண். மேலும் அவர் நான் இளமையாக இருப்பது என் தவறா? என் தலை முடிக்கு வெள்ளை சாயம் பூசிக் கொள்ளவும் நினைத்திருக்கின்றேன் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இது குறித்து தொகுப்பாளர் எதிரணியில் உள்ள ஆண்களிடம் எடுத்துக் கூறுகையில், அதில் ஒரு ஆண் அப்பெண்ணின் சூழ்நிலை புரியாமல் ‘ நெருப்பு இல்லாமல் புகையுமா’ என்று அவரை இழிவுபடுத்தும்படி பேசி உள்ளார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த தொகுப்பாளரும் மீண்டும் முதலில் இருந்து அவருக்கு புரியும் படி எடுத்துரைத்தும், உங்களது கருத்தை வாபஸ் பெறக் கோரியும் அந்த நபர் முடியவே முடியாது என்றார். அந்தப் பெண்ணிடத்தில் உங்கள் தங்கையோ, அக்காவோ இருந்திருந்தால் இப்படித்தான் சொல்லி இருப்பீர்களா என்று கேட்டும் அவர் தாயோ தங்கையோ தவறு.. தவறுதான் என்று கூறி அந்தப் பெண்ணை மேலும் அவமானப்படுத்தினார். அரங்கில் உள்ள அனைவருமே அவரது பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். மிகவும் கோவம் அடைந்த தொகுப்பாளர் மீண்டும் மன்னிப்பு கேட்கக் கோரியும் முடியாது என்றார்.
ஆத்திரமடைந்த தொகுப்பாளர் உங்கள் பேச்சை வாபஸ் பெறுங்கள், இல்லை என்றால் நிகிழ்ச்சியை விட்டு வெளியேறுங்கள் என்றார். அந்த நபரும், அந்தப் பெண்ணை பற்றி ஏதும் தெரியாமல் அந்த பெண்ணின் மீது பழி சுமத்துகிறோம் என்ற குற்றஉணர்ச்சி சிறிதும் இல்லாது சோவை விட்டு வெளியேறினார். இன்னமும், இப்படியும் ஒரு சில ஆண்கள் உள்ளனர் என்பது வேதனைக்குறியது.