சோப்பு வாங்கும் சாமானியன் கூட வரி செலுத்துகிறார் உங்களால் செலுத்த முடியவில்லையா!! தனுஷிற்கு நோஸ்கட் கொடுத்த நீதிபதி!!
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகர் தனுஷ். இவர் தமிழில் பல முன்னணி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் நடிப்பிற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டு சூப்பர் ஹிட் திரைப்படமாக விளங்கியுள்ளது.
மேலும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், இங்கிலீஷ் போன்ற பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். மேலும் இவர் அண்மையில் இந்தி மற்றும் இங்கிலீஷ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி உலகம் முழுவதும் திரைப்படங்களை நடித்து பிரபலமாக இருக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் நடிகர் விஜய் தனது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்காக நீதிமன்றத்தில் வரிவிலக்கு வழக்கு பதிவு செய்து இருந்தார். அந்த வழக்கு அண்மையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தது.மேலும் அந்த வழகுக்கு நீதிபதி வரிவிலக்கு செய்யமுடியாது என்று கூறி நடிகர் விஜய்யை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 1 ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி பலர் கடுமையாக விமர்சித்து வந்தனர். பலர் அவருக்கு ஆதரவு கொடுத்து இருந்தனர்.
இதை தொடர்ந்து தற்பொழுது நடிகர் தனுஷ் தான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேலும் அதனை விசாரித்த நீதிபதி 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட பெட்ரோலின் ஜிஎஸ்டி வரியை செலுத்துகிறார். மேலும் ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகின்றனர்.
அதனை கட்ட முடியவில்லை என்று உங்களைப்போல் சமூகத்தில் வளர்ந்து வரும் நடிகர்கள் இப்படி நீதிமன்றத்தை நாடுகின்றனர். அனைவரும் பொறுப்புடனும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று தனுஷுக்கு நோஸ்கட் செய்துள்ளார் நீதிபதி.