சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவிருக்கும் எவர்கிரீன் பியூட்டி!

Photo of author

By Parthipan K

சினிமா சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார்-மஞ்சுளாவின் இளைய மகளான ஸ்ரீதேவி, குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்குகளில் பல படங்கள் நடித்துள்ளார்.

அதன்பின் 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு சென்றுவிட்டார்.

திருமணத்திற்கு  பிறகு  சினிமாவின் பக்கம் எட்டிப் பார்க்காத ஸ்ரீதேவி தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஒருவேளை… காதல் வைரஸ், தேவதை கண்டேன், பிரியமான தோழி, தேவதையை கண்டேன்  உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் மூலம் ரசிகர்களை மெய்மறக்கச் செய்த நடிகை ஸ்ரீதேவி மறுபடியும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவிருக்கும் எவர்கிரீன் பியூட்டிஸ்ரீதேவியை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியாகியுள்ள இவருடைய புகைப்படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்ப்பை பெற்று அதிக பகிரப்பட்டு வருகிறது.