தமிழ் திரையுலகிலும் அரசியல் வாழ்விலும் இன்றுவரை இவரை போல் ஒருவர் இல்லை என்று கூறும் அளவிற்கு தனித்து நிற்கக் கூடியவராக டாக்டர் எம்ஜிஆர் விளங்கி வருகிறார். மக்கள் இவருக்கு பொன்மனச் செம்மல் சின்னவர் என பல நற்பெயர்களை இட்டு அழைத்த வருகின்றனர்
இவருடைய காலகட்டத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தையும் பலமுறை கேட்டு அதில் இருக்கக்கூடிய அர்த்தங்கள் தெளிவாக இருப்பின் மட்டுமே அந்த பாடலை தன் படத்தில் இடம் பெற அனுமதிக்க கூடிய ஒரு வல்லமை பெற்றவராக எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் விளங்கி இருக்கிறார். இது ஒரு புறம் என்றால் அவர் அம்மாவின் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்டவராக இருந்ததால் இவருடைய அன்னை சார்ந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்ததோடு இன்றளவும் போற்றப்படுகிறது.
எம்ஜிஆரை பற்றி கங்கை அமரன் சமீபத்தில் தெரிவித்த சுவாரசியமான தகவல் :-
அலைகள் ஓய்வதில்லை படத்தினுடைய வெற்றி விழாவிற்கு நடிகர் மற்றும் முதல்வரான எம்ஜிஆர் தலைமை ஏற்று நடத்தி இருக்கிறார். அந்த விழாவிற்கு கங்கை அமரன் தொகுப்பாளராக இருந்த நிலையில் பாவலர் கிரியேஷன்ஸ் படத்தின் தயாரிப்புகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கங்கை அமரன் பாடல் ஆசிரியர் ஆகவும் பாடகர் ஆகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகங்களை சினிமா துறையில் கொண்டவராக இருந்ததோடு அந்த விழாவில் தொகுப்பாளராகவும் இருந்த நிலையில் எம்ஜிஆர் கங்கை அமரனை நோக்கி உலக மகா கவிஞன் நீ என தெரிவிக்கிறார். காரணம் யாருமே பயன்படுத்தாத ஒரு வார்த்தையை அதாவது வாடி ஏன் கப்பக்கிழங்கே என ஒரு கிழங்கை வைத்து பாடல் அமைத்ததால் எம்ஜிஆர் கங்கை அமரன் அவர்களை கிண்டல் அடித்திருக்கிறார்.