திருக்காட்டுப்பள்ளியில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

0
175

 

திருக்காட்டுப்பள்ளியில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

 

திருக்காட்டுப்பள்ளியில் அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியில் ஜி.எஸ் பிரபு வசித்து வருகிறார். ஜி.எஸ் பிரபு அவர்கள் அதிமுக கட்சியை சேர்ந்தவர். மேலும் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியின் முன்னாள் வார்டு கவுன்சிலர் ஆவார். அது மட்டுமில்லாமல் அதிமுக கட்சியின் இளைஞர் இளம்பெண் பாசறையின் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். சமூக ஆர்வலரான ஜி.எஸ் பிரபு பிளக்ஸ் அச்சடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

 

ஜி.எஸ் பிரபு தற்பொழுது மைக்கேல்பட்டி பாம்பாளம்மன் கோவில் அருகே வசித்து வருகிறார். நேற்று(ஆகஸ்ட் 15) இரவு வேலைகளை முடித்துவிட்டு பழமார்நேரி சாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

 

அப்பொழுது இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஜி.எஸ் பிரபு அவர்களின் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ஜி.எஸ் பிரபு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஜி.எஸ் பிரபுவின் உடை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பழமார்நேரி சாலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Previous articleதேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்… விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…
Next articleவடக்கில் காங்கிரஸ் வளர்கிறதா இல்லை தேய்கிறதா ?…