வணிக வரித்துறை செயலாளரின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் இன்று காலமானார்!!

0
196

முன்னாள் டிஜிபி எல்.என்.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

வணிக வரித்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தையும், முன்னாள் எம்எல்ஏ ராணியின் கணவரும், முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரின் பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமம் என்பதால், இறுதிச் சடங்குகள் அங்கு நடைபெறும் என தகவல்கள் வந்துள்ளன. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் பீலா ராஜேஷ் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். எல்.என்.வெங்கடேசன் காவல்துறையில் உயர் பொறுப்புகளை பெற்று சிறப்பாக செயல்பட்டவர் என்றும் காவல்துறையினருக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஎனக்கு இந்த விருதும் மட்டும் கிடைக்காதா? மல்யுத்த வீராங்கனை
Next article24 மணி நேரத்தில் 2,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here