திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளர் கே சி வீரமணி பங்கேற்று தலைமை தாங்கி இருக்கின்றார். இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக நான் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விடுவேன் என்று தேர்தலுக்கு முன்னர் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்த தொகுதியில் ஒரு சில இடங்களில் அதிமுகவிற்கு சாதகமாக வாக்குகள் பதிவானது இருந்தாலும் கிராமப்புறங்களில் அதிமுகவிற்கு பெரிய அளவில் வாக்குகள் கிடைக்கவில்லை. அதிமுக நிர்வாகிகள் இளைஞர்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். ஜோலார்பேட்டை சட்டசபைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் யார் என்று மக்களுக்கே தெரியாது. அதிமுகவினர் இளைஞர்களை ஒன்றிணைத்து செல்லாத காரணத்தால், அவர்களுடைய வார்த்தைகள் எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு போய்விட்டது என்று தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவிற்கு வரவேண்டிய 13,000 வாக்குகள் சீமான் கட்சிக்கு சென்றுவிட்டது. இதற்கு அதிமுக கிளை நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தான் காரணம் என்று தெரிவித்திருக்கிறார். பொதுமக்கள் என்னை தோற்கடிக்கவில்லை கட்சியின் நிர்வாகிகள் தான் தோற்கடித்தார்கள் என்று தெரிவித்த அவர் இது இப்போதுதான் எனக்கு தெரிய வந்திருக்கிறது என கூறியிருக்கிறார்.