முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை!!

0
412
#image_title

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை!!

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்துவதற்கு  உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் தன்னை விசாரணைக்காக அழைத்து விட்டு தன் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்துகிறது என்றும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது  எனவும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்த  உயர்நீதிமன்ற மதுரை கிளை இதற்கு தமிழக அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

Previous articleஅடுப்பில் வெந்நீர் வைத்துவிட்டு தாயுடன் மருத்துவமனை சென்ற வாலிபர்! அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபரீதம்! 
Next articleபேருந்தில் மாணவர்களுக்கான சலுகை குறைப்பு! நஷ்டத்தில் இயங்குவதால் அரசு எடுத்த அதிரடி முடிவு!