ADMK TVK: தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய விஜய் தற்பொழுது கூட்டணியின்றி தவித்து வருகிறார். ஒரு பக்கம் திமுக கூட்டணி கட்சியை கலைக்க முயற்சித்தார் ஆனால் அதுவும் கை கொடுக்கவில்லை. மற்றொரு பக்கம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விஜய் கொடுத்த டிமாண்டானது எடப்பாடிக்கு கட்டுபடியாகவில்லை. இதனால் ரூட்டை மாற்றி பாஜகவிடமே மீண்டும் சரணடைந்தார். அந்த வகையில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது.
இவர்களின் கூட்டணிக்காகவே அண்ணாமலையும் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்கையில் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியேறியுள்ளார். இதற்கு முக்கிய காரணமாக பாஜகவுடன் கூட்டணி வைத்த தான் என தெரிவித்துள்ளார். தற்சமயம் இவரை தங்கள் பக்கம் இழுக்க மாற்றுக் கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். அந்தவகையில் இவர் விஜய் யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்லும் பட்சத்தில் முக்கிய பதவி வழங்குவதுடன் நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறுகின்றனர்.
பாஜக திமுக என இரு பக்கமும் சேர முடியாத ஜெயக்குமார் கட்டாயம் விஜய்யுடன் கைகோர்ப்பார் எனக் கூறுகின்றனர். ஏனென்றால் இவருக்கும் ஓபிஎஸ்சிக்கும் ஒரு துளி கூட ஒத்து வராது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஓபிஎஸ் குறித்த கேள்வி கேட்ட பொழுது, அவர் ஒரு கொசு, பல பிரச்சனைகள் இருக்கும் போது கொசுவை பற்றி பேசுவதற்கு நேரமில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.