சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு ஹால் டிக்கெட் – டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! 

Photo of author

By Amutha

சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு ஹால் டிக்கெட் – டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! 

Amutha

சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு ஹால் டிக்கெட் – டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! 

சுகாதார அலுவலர் காலி பணியிடங்களுக்கான கணினி வழி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் உள்ளடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான காலி பணியிடங்களை நேரடி நியமனங்கள் செய்வதற்கான கணினி வழி தேர்வுகாண ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 

இது பற்றி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலக அலுவலர் பணிக்கான 12 காலி இடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 19.11.2022 அன்று பெறப்பட்டன.

இதற்கு காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்காக எழுத்து தேர்வு பிப்ரவரி 13ஆம் தேதி அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவு மூலம் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.