தேர்வு கட்டாயம் இல்லை!! அரசு வேலை நிச்சயம்!!

0
116

தேர்வு கட்டாயம் இல்லை!! அரசு வேலை நிச்சயம்!!

இன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள் பலர் வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். படித்தால் வேலை கிடைக்கும் என்றால் அனைவருக்கும் வேலை கிடைத்திருக்கும் ஆனால் இன்று அப்படி இல்லை. தனியார் நிறுவனத்தில் வேலை கிடைப்பதே மிகவும் அரிதாக இருக்கையில் அரசு வேலை கிடைப்பது எவ்வளவு கடினமாக இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் இருந்து வெளியேறும் கோடிக்கணக்கான மாணவர்களின் சிலர் மட்டுமே வேலை கிடைத்து வேலைக்கு செல்கின்றனர். வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அரசு வேலை கிடைப்பது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக தெரிகிறது. அரசு வேலை கிடைப்பது ஏன் கடினம் என்றால் அனைத்திற்கும் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் பலர் நமக்கு கண்டிப்பாக அரசு வேலை கிடைக்காது என்று எண்ணி விட்டு விடுகிறார்கள். ஆனால் நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் எல்லா அரசு வேலைகளுக்கும் தேர்வு என்பது கட்டாயம் இல்லை.

நீங்கள் நல்ல விளையாட்டு வீரர் என்று தகுதி இருந்தால் போதும் ராணுவம் மற்றும் ரயில்வே துறை போன்றவற்றில் எந்தவித தேர்வும் இல்லாமல் விளையாட்டு ஒதுக்கீடு அதன் கீழ் மத்திய அரசு வேலையே வாங்கிவிடலாம்.

விளையாட்டு ஒதுக்கீடு என்பதன் கீழ் இராணுவம் ரயில்வே துறை மட்டுமல்லாமல் வங்கி, அஞ்சல் அலுவலகம், காவல்துறை போன்றவற்றின் கீழ் விளையாட்டு வீரர் சான்றிதழ் அடிப்படையிலேயே மத்திய மற்றும் மாநில அரசு வேலையை பெற முடியும்.

இதில் அரசு காவல்துறை மற்றும் வனத்துறை போன்ற துறைகளில் 10% விளையாட்டு ஒதுக்கீடு என்ற அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் நீங்கள் மத்திய அளவில் வெற்றி பெற்றீர்கள் என்றால் form 1 மாநில அளவில் வெற்றி பெற்றீர்கள் என்றால் form 2 மாவட்ட அளவில் வெற்றி பெற்றீர்கள் என்றால் form 3 என்ற மதிப்பின் கீழ் சான்றிதழ் வழங்கப்படும்.

எந்த வயதினர்களுக்கு எல்லாம் இந்த அரசு வேலை கிடைக்கும் என்றால்,நீங்கள் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்றால் உங்களது வயது வரம்பு 16 முதல் 24 வரை இருப்பவர்கள் இதற்கு தகுதி உடையவர்கள்.

மத்திய மற்றும் மாநில அளவில் அரசு வேலை வேண்டுமென்றால் வயதுவரம்பு 17 முதல் 28 வரை இருப்பவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள்.

இவர்கள் அனைவருமே விளையாட்டு வீரர் என்று சான்றிதழ் பெற்றிருந்தால் அரசு வேலையை எளிதாக பெற முடியும்.

தமிழ்நாட்டில் மட்டும் சிலம்பம், கபடி, குறி பார்த்து எறிதல் போன்ற 54 விளையாட்டுகளின் கீழ் இந்த விளையாட்டு வீரர் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

 

 

Previous articleஇதில் ஒரு சொட்டு போதும்!!  காது சீழ் வடிதல் நொடியில் பலன் அருமையான டிப்ஸ்!!
Next articleDDA நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ரூ. 78,800 மாத சம்பளம்!!