11 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியீடு!! அமைச்சர் அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

11 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியீடு!! அமைச்சர் அறிவிப்பு!!

இன்று காலை 10 மணி அளவில் பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 326 அரசு மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றது. இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று இருகின்றனர்.

பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வருகிற ஜூன் 19 ஆம் தேதி துணைத்தேர்வு தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் வெளியிட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவுற்றது. அதே போல் 10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவுற்றது. 10ஆம் வகுப்பிற்க்கான தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனல் தற்போது 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாகிறது. அதாவது 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவித்த மே 19 ஆம் தேதியே 10 வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.