மீண்டும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள்!! தமிழ்நாடு தேர்வு இயக்கம் அதிரடி அறிவிப்பு!!
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தது. அதனையடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் சில மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் தவறுகள் இருப்பதாக கூறி மறு மதீப்பிடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்கள்.
மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மேற்ப்படிபிற்கு சேர விண்ணப்பித்திருந்தார்கள். அதனையடுத்து பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைதேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இந்த துணைத்தேர்வை 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47, 934 மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
மேலும் அவர்கள் அதே கல்வி ஆண்டியில் மேற்படிப்பு தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜூன் மாதம் துனைத்தேர்வுகள் நடத்தப்படட்டது. அதனையடுத்து ஜூன் 19 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது + 2 மாணவர்களின் துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை ஜூலை 24 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழக தேர்வு இயக்கம் தெரிவித்திருந்து.
இந்த நிலையில் தற்போது அதன் முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்த தகவலை ஏற்கனவே தமிழ்நாடு தேர்வு இயக்கம் அறிவித்திருந்தது. மேலும் அதனை பதிவிறக்கம் செய்ய இணையத்தள பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதனையடுத்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதி, பதிவிட்டு மதிப்பெண்ணை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் விடைத்தாள் நகல், மறு கூட்டல் மதிப்பெண் பட்டியலை ஜூலை 27 மற்றும் 28 ஆம் தேதி இயக்குனர் அலுவகத்தில் நேரில் சென்று பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.