இந்தப் பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியானது! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!
வருடம் தோறும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்படும்.இந்த ஆண்டு மொத்தம் 42 தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.ஆனால் 38 தேர்வுகள் சில காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இன்று வரை குரூப் 2 மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏதும் வெளிவரவில்லை.இந்த தேர்வுகளுக்கான தேதியை எதிர்பார்த்து பலர் காத்துக்கொண்டுள்ளனர்.2021 ஆம் ஆண்டு தேர்வு கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து தேர்வுகளும் ஒவ்வொன்றாக நடத்தப்படும் என கூறியுள்ளனர்.
தற்போது ஆர்சிரயர்களுக்கான தேர்வு தற்பொழுது வெளியிடப்பட்டதுள்ளது.வரும் மாதம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளனர்.இந்த தேர்வுகளில் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் தேர்வு எழுதும் போது ஊழல் செய்வது கண்டறியபட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவது தேர்வு எழுத முடியாது என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி தேர்வு எழுதும் அறையில் ஏதேனும் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டால் கட்டாயம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க முடியும் என எச்சரித்துள்ளனர்.தற்போது நடைபெற இருக்கும் ஆசிரியர் தேர்வுக்கு இது மாறியான விதிமுறைகளை எச்சரித்துள்ளனர்.குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடைபெறும் பொழுது அதிகப்படியான விதிமுறைகள் போடா வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.
அதேபோல அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத் தாள் கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டனர்.கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்வுகளின் முடிவானது தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.