தலையில் DANDRUFF அதிகமாக இருக்கா? இந்த இரண்டு பொருட்களை அரைத்து தேயுங்கள்!!

Photo of author

By Divya

பொடுகு யாருக்கு வேண்டுமானாலும் வரக் கூடும்.இந்த பொடுகு வந்துவிட்டால் தலை அரிப்பு,தலை முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் அதிகளவு சந்திக்கநேரிடும்.இந்த பொடுகு தொல்லை சரியாக கீழ்கண்ட ஹோம் ரெமிடி கைகொடுக்கும்.

தேவையான பொருட்கள்:

1)வேப்பிலை
2)தயிர்

செய்முறை:

ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் அலசி சுத்தப்படுத்தவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 கப் தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.

இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து கைகளால் மசாஜ் செய்யவும்.பிறகு ஒரு மணி நேரம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் தலையை அலசி சுத்தம் செய்யவும்.இப்படி செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

தேவையான பொருட்கள்:

1)எலுமிச்சை சாறு
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை:

ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதனுள் இருக்கின்ற சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.

பிறகு மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி சுத்தம் செய்ய செய்யவும்.இந்த முறையில் தலையில் உள்ள பொடுகை எளிதில் போக்கலாம்.

தேவையான பொருட்கள்:

1)வெங்காயச் சாறு
2)பேக்கிங் சோடா

செய்முறை:

5 முதல் 10 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை தலைமுழுவதும் அப்ளை செய்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

தேவையான பொருட்கள்:

1)பொடுதலை
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை:

அடுப்பில் பாத்திரம் வைத்து 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 25 கிராம் பொடுதலை சேர்த்து கொதிக்கவிடவும்.

பிறகு இந்த எண்ணையை ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி தினமும் தலைக்கு பயன்படுத்தி வரவும்.இப்படி செய்தால் பொடுகு நீங்கி முடி உதிர்வு நிற்கும்.