உச்சந்தலையில் அதிக முடி உதிர்வு ஏற்படுகிறதா? இதை அங்கு தேய்த்தால் புதுமுடி வளரும்!!

0
152

சிலருக்கு முன் நெற்றி மற்றும் தலையின் பின் பக்க பகுதியில் முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.ஆனால் பெரும்பாலானோர் உச்சந்தலையில் முடி உதிர்வை சந்திக்கின்றனர்.உடலில் அதிகப்படியான சூடு இருந்தால் உச்சந்தலையில் அதிக முடி உதிர்வு ஏற்படும்.

இந்த முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய சிலர் கெமிக்கல் ஆயில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.இதனால் புதிய முடி வளருமா என்றால் சந்தேகம் தான்.தற்பொழுது விற்கப்படும் கெமிக்கல் ஆயில் தலைமுடி உதிர்வை அதிகப்படுத்துபவையாக தான் இருக்கின்றது.

ஆரோக்கியமான உணவுகள் மூலம் முடியை வலுவாக்க முடியும்.அதேபோல் சிலர் வீட்டுப் பொருட்களை கொண்டு முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியும்.கற்றாழை,தேங்காய் எண்ணெய்,வெங்காய சாறு போன்றவை உடலை குளிர்ச்சியாக்கும் பொருளாகும்.இந்த பொருட்களை தலைக்கு பயன்படுத்தி வந்தால் அசுர வேகத்தில் முடி வளர்ச்சி இருக்கும்.

கற்றாழை ஜெல்
தேங்காய் எண்ணெய்
வெங்காய சாறு
வைட்டமின் ஈ எண்ணெய்

முதலில் வைட்டமின் ஈ எண்ணையை கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு உள்ளிருக்கும் ஜெல்லை தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.இதை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து மிக்சர் ஜாரில் இந்த கற்றாழை ஜெல்லை போட்டு க்ரீமி பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அரைத்து வைத்துள்ள வெங்காய சாறு,கற்றாழை ஜெல் மற்றும் வைட்டமின் ஈ மாத்திரை ஒன்றை போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை உச்சந்தலையில் தடவி இரு கைகளாலும் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.பிறகு குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.இதை தொடர்ந்து செய்து வந்தாலே உச்சந்தலையில் புதிய முடி வளரும்.

Previous articleUmagineTN 2025: ஸ்டார்ட் அப் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு: தமிழக அரசின் அற்புத முயற்சி 
Next articleபித்தத்தை முறியடிக்கும் சண்டிக்கீரை!! இது ஆண்களுக்கு வரப்பிரசாதமாக திகழும் கீரை!!