அமைச்சர் செங்கோட்டையன் உயிருக்கு திடீரென்று ஏற்பட்ட ஆபத்து! அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்!

Photo of author

By Sakthi

கோபி அருகே இருக்கின்ற வேட்டைக்காரன் கோவில் பகுதியில் ரூபாய் 4.60 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருக்கின்ற படகு சவாரி உடன் உடைய பூங்காவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி கருப்பண்ணன் போன்றோர் ஆரம்பித்து வைத்தார்கள்.

அந்த சமயத்தில், அமைச்சர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் போன்றோர் படகு சவாரி ஆரம்பித்து வைப்பதற்காக விசைப்படகில் ஏற முற்பட்டனர். அந்த சமயத்தில் படகு தடுமாறி கவிழும் நிலைக்கு சென்றது.

படகு ஓட்டுபவர் தடுப்பு கம்பிகளை பற்றி கொண்டதன் காரணமாக, படகு கவிழாமல் நின்றுவிட்டது. இதன் காரணமாக அந்த இடத்தில் ஒரு சில நிமிடங்கள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதன் காரணமாக ஏரியில் சில நிமிடங்கள் சுற்றிவிட்டு அமைச்சர்கள் கரை திரும்பிவிட்டார்கள்!