தலையை வெட்டிய ரவுடி! ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை!

Photo of author

By Sakthi

கடலூரைச் சார்ந்த தாதா வீரா என்பவருக்கும் கிருஷ்ணா என்பவருக்கும் முன்பகை இருந்து வந்ததாக தெரிகின்றது இந்த நிலையில் கிருஷ்ணா வீராவை தலையை வெட்டி கொலை செய்து இருக்கின்றார். அதனை எடுத்து கிருஷ்ணா பண்ருட்டி அடுத்து இருக்கின்ற குடுமியான்குப்பம் பகுதியில் மறைந்து இருந்ததாக தெரிகிறது.

ஆகவே கிருஷ்ணாவை கைது செய்வதற்காக போலீசார் அந்த பகுதியை சென்றடைந்தார்கள். அந்த சமயத்தில் கிருஷ்ணா காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதில் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கிருஷ்ணாவை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி கிருஷ்ணாவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. அதோடு துண்டிக்கப்பட்ட ரவுடி வீராவின் தலை எங்கு உள்ளது என்று காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.