அதிமுகவின் அலுவலகத்தில் பரபரப்பு! ஓபிஎஸ் ஆதரவாளருக்கு விழுந்த கத்தி குத்து!

Photo of author

By Sakthi

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் உண்டாகி பரஸ்பரம் 2 தரப்பினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தி வந்தனர்.

அதிமுகவின் தலைமை அலுவலகம் இருக்கின்ற பகுதிகளில் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் மீது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது.

பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் அலுவலகத்திற்கு அருகே தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கே பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 2 தரப்பினரும் எதிரெதிரே நின்று கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்திக்கொண்டனர் என்று சொல்லப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கதவை உடைத்த சூழ்நிலையில், பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்தில் நுழைந்திருக்கிறார்.

இதற்கு நடுவே ஓபிஎஸின் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, அந்த பகுதி முழுவதும் பதற்றத்துடன் காணப்படுகிறது, காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் தலைமை அலுவலகம் வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை விரட்டியடித்தனர், அந்தப் பகுதி போர்க்களம் போல காட்சி தருகிறது.

அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டிய கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, வன்முறை வெடித்திருக்கிறது இதற்கடுத்ததாக இந்த வன்முறையை கற்றுக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு அதிரடி படையை களமிறக்கி இருக்கிறது.