எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளரா? அல்லது இடைக்கால பொதுச் செயலாளரா? தொடங்கியது பொதுக்குழு கூட்டம்!

0
70

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று தற்போது தொடங்கி இருக்கிறது அதனை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் அந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கி தொடங்கியிருக்கிறது .

முன்னதாக அதிமுகவின் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்திலேயே காத்திருக்கிறார். கட்சி அலுவலகத்திற்கு வெளியில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோரின் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது இதனால் அதிரடி படை அங்கே குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஆரம்பமானது அதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. முதலில் செயற்குழு ஆரம்பித்தவுடன் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர் என சொல்லப்படுகிறது.

பொதுக்குழு ஆரம்பித்த உடன் அங்கிருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் புகைப்படங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த கூட்டத்தில் அவர் தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் தற்காலிக பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக ஏன் இப்படி பிரம்மாண்டமான ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே அவர் நிரந்தர பொதுச் செயலாளராக கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களால் இந்த கூட்டத்திலேயே அங்கீகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு இந்த பொதுக்குழுவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததை அறிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து அதனை கொண்டாடினர் என்று சொல்லப்படுகிறது.