“நம்ம ஸ்கூல்” திட்டத்தின் பிரத்தேயக இணையத்தளம்!! முன்னாள் அரசு பள்ளி மானவர்களுக்கு முதல்வரின் ரெக்வஸ்ட்!

Photo of author

By Rupa

“நம்ம ஸ்கூல்” திட்டத்தின் பிரத்தேயக இணையத்தளம்!! முன்னாள் அரசு பள்ளி மானவர்களுக்கு முதல்வரின் ரெக்வஸ்ட்!

அரசு பள்ளிகளை அனைத்து விதங்களிலும் மேம்படுத்தும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை நாளை தொடங்கி வைக்கும் நிலையில், அரசு பள்ளியில் படித்து தற்பொழுது பதவி மற்றும் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தாமாகவே முன்வந்து தாம் படித்த அரசு பள்ளியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இணைய வசதி, பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துதல், வர்ணம் பூசுதல் என்ற அனைத்து உதவிகளையும் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் இதற்கென்று பிரத்தியேக வகையில் இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் அதில் முன்பு படித்தவர்கள் உதவிடும் வகையில் உதவி தொகை அதில் செலுத்தி அவர்கள் செலுத்தும் உதவி தொகையில் எந்தெந்த வேலைகள் நடக்கிறது என்ற வரைக்கும் கண்காணிக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அரசு பள்ளியில் படித்த தற்பொழுது தொழிலதிபர்களாக, என் ஜி ஓ போன்ற நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தாம் படித்த பள்ளிகளுக்கு தாமாக முன்வந்து எந்தவித உதவிகளையும் செய்யும் நோக்கில் தான் நம்ம ஸ்கூல் திட்டம் உருவாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.