பாஜக அசுர வெற்றி காங் பாதாளத்தில்! கருத்து கணிப்பு முடிவுகள்

0
208

பாஜக அசுர வெற்றி, காங் அகல பாதாளத்தில்! கருத்து கணிப்பு முடிவுகள்

மஹாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தலில் பாஜக அதிகமான இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் எனவும், காங்கிரஸின் செல்வாக்கு சரியும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மஹாராஷ்டிரா மற்றும் அரியானாவில் வரும் அக்., 21ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அக்., 24ல் வெளியிடப்படுகிறது. கட்சிகளின் பிரசாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு தொலைக்காட்சிகள் கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான ரிபப்ளிக் தொலைக்காட்சி சார்பாக இரு மாநிலங்களிலும் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகளில் பாஜக அமோக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.

கருத்துக்கணிப்பு முடிவுகள்,

மொத்த இடங்கள்: 288

மகாராஷ்டிரா:
பாஜ., : 142 முதல் 147
சிவசேனா : 83 முதல் 85
காங்., கூட்டணி: 48 முதல் 52

ஹரியானா:
மொத்த இடங்கள்: 90
பாஜ., : 58 முதல் 70
காங்., : 12 முதல் 18

Previous articleபஞ்சமி இடமா? நிருபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்! மு.க.ஸ்டாலின் இராமதாசுக்கு சவால்
Next articleமகனை ஹீரோ ஆக்கியது எப்படி? தங்கர் பச்சான் பேட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here